இதை யாரிடம் போய் சொல்வேன்......
- என் வண்ண நிழல் காண ஆசை...!
பனித்துளியில் தாகம் தீர்க்க ஆசை....!
வானுயர பறக்கும் வானம்பாடியுடன் அந்த வளைவுவரை விரல் பிடித்து நடந்து செல்ல ஆசை....!
வெயிலில் நனையும் அந்த ஒற்றை பனைமரத்துக்கு குடை பிடிக்க ஆசை...!
குளித்தெழுந்து வந்த காகத்திடம் நேரவிரயம் பற்றி எடுத்துரைக்க ஆசை..!
கடிகார முட்களிடத்தில் ஓடாமல் ஒரிடத்தில் நின்று மரியாதையாக நேரம் காட்ட சொல்லி கொடுக்க ஆசை...!
தூக்கமின்றி தவிக்கும் என் கனவுகளுக்கு தாலாட்டு பாடி தூங்க வைக்க ஆசை...!
யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த தன் ஆசைகளை புத்தன் வாயாலேயே கேட்டரிய ஆசை...!
படிக்க மட்டுமே தெரிந்த என் கண்களுக்கு எழுதவும் கற்றுக் கொடுக்க ஆசை...!
நடக்கபயிலும் குழந்தையிடம் தவள கற்றுக்கொள்ள ஆசை....!
ஒரு முறையாவது வானவில்லின் நிழல் பார்த்துவிட ஆசை.....!
என்னவளின் கன்னக்குழியில் என் எச்சில் நிறைக்க ஆசை.....!
என் மகளின் மடியில் ஒரு நிமிடம் கண்ணயர ஆசை...!
பக்கம் பக்கமாக ஒரு வரிக் கவிதை எழுத ஆசை....!
ஆசை ஆசை ஆசைதான்.......
- இறுதியாக இவையனைத்தையும் யாரிடமாவது உளறிவிட வேண்டுமென்ற ஒரேயொருமுறை ஆசைதான்....
கடைசியில் இதுமட்டும்தான் நிறைவேறியதுபோல தெரிகிறது.....
நின்று கேட்டதற்கு நன்றி...!
கஷ்டம்! கஷ்டம்!;-)))
ReplyDelete:) - Sangeetha
ReplyDeleteப்பாஆ நல்ல ஆசை! அருமை :)) நல்லாயில்(லை) ;)
ReplyDeleteMeeru :))
Ungal aasai engal aasaiyai thoondugirathu.... :))
ReplyDelete- Prithiviraj