என் நாக்கிலேறிய மண்புழுவொன்று உள்நாக்கை மட்டும் தொட்டு திரும்பியது போன்றதொரு உணர்வு....
கை வழியே கழுத்துவரை ஏறிய அட்டை ஒன்றை தட்டிவிட எத்தனித்தும் முடியாமல் என் கழுத்தினிலேயே ஊறிக் கொண்டிருப்பது போன்றதொரு உணர்வு...
மதுவிலே நனைந்த தலையனையொன்றில் முகம்புதைத்து படுத்திருப்பது போன்றதொரு உணர்வு...
பேருந்தில் அருகே இருந்தவன் வாயிலெடுத்ததில் எனையறியாமல் என் உள்ளங்கை ஊன்றி எழுந்தது போன்றதொரு உணர்வு...
சாலையின் நடுவே உடல் சிதறி கிடக்கும் ஒருவனின் ஈரம் காயாமல் இருந்த குருதியில் எதிர்பாராமல் கால் பதித்தது போன்றதொரு உணர்வு...
இப்படியாகத்தான் இருந்திருக்குமோ வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட பரத்தையொருத்தியின் மேல்பட்ட முதல் ஆண்மகனின் தீண்டல்!

No comments:
Post a Comment
Just write, What do you feel right now.... :)