ஒரு குடையினடியே நம்மிருவருக்கும் இடம் கொடுத்த மழைக்கும்
நன்றி சொல்வேன்..!
நன்றி சொல்வேன்..!
நடுஇரவில் உனை பயமுறுத்தி என் கரம் பற்ற வைத்த இடிக்கும் நன்றி சொல்வேன்..!
உன்னைப்பற்றி எதையாவது எழுதுவேன் என இன்றுவரை காத்திருக்கும் எனது டைரியின் தாள்களுக்கும் நன்றி சொல்வேன்..!
அன்றைய இரவில் உனக்கு ஊட்டிவிட வாய்ப்பளித்த உன்விரல் மருதானிக்கும் நன்றி சொல்வேன்..!
என் விரல் பிடித்து சாலை கடக்க உதவிய நெரிசலுக்கும் நன்றி சொல்வேன்....!
உன் முந்தானையில் தலைத்துவட்ட வாய்ப்பளித்த எனை நனைத்த மழைதுளிகளுக்கும் நன்றி சொல்வேன்...!
அன்றைய இரவில் நமது இருமனம் பகிர மௌனித்த இரவுக்கும் நன்றி சொல்வேன்....!
ஒரேயொரு குறைதான்...!
இவையனைத்திலும் என்னுடனிருந்த உன்னிடம்தான் நன்றிக்கடன் பட்டுள்ளேனடியே என்னுயிரே...!
ராசுக்குட்டி...

ரெம்ப அழகா எழுதி இருக்கீங்க, கொஞ்சம் பொறாமை கூட சுந்தர், :-)) ரெம்ப பிடிச்சிருக்கு
ReplyDeleteநன்றி....;))
Deleteசெம்ம
ReplyDelete//அன்றைய இரவில் உனக்கு ஊட்டிவிட வாய்ப்பளித்த உன்விரல் மருதானிக்கும் நன்றி சொல்வேன்..!
//ஒரேயொரு குறைதான்...!
இவையனைத்திலும் என்னுடனிருந்த உன்னிடம்தான் நன்றிக்கடன் பட்டுள்ளேனடியே என்னுயிரே...!
ரொம்ப நல்லாருக்கு :))))
நன்றீஸ் மீறூ..:))
Deleteசின்ன சின்ன விஷயங்கள் தான்.. ஆனால் மிக பெரிய கொடுப்பினை..., அதை அனுபவிக்கும் நொடிகளை வார்த்தைகளால் வடித்தல்...!
ReplyDeleteசூப்பரா அனுபவிச்சி எழுதியாச்சி.. ! நல்லது.
காதலென்ற கண்றாவி வயப்பட்டால் இப்புடித்தான்... கண்டதிற்கும் நன்றி சொல்ல தோணும்.
நானெல்லாம் லோக்கல் ட்ரைன் கூட்டத்துக்கும், மும்பை ஸ்பெஷல் மன்சூன் மழைக்கும் நிறைய நன்றி சொல்லிருக்கேன்.
அந்த நன்றி கடனின் மூலதாரமே தாரமாக்கத்தானே.. ! அப்புறம் என் வாழ்வின் ஆ'தாரம்' கூட.. !
இன்னும் நிறைய பதிந்து பகிருங்கள்..!!
உங்களுடைய வௌப்படையான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் நண்பரே... இன்னொரு விஷயம் இதையெல்லாம் 'அனுபவிச்சி' எழுதலங்க...அனுபவி்க்கனுமனு ரொம்ப ஆசை..இவையனைத்தும் கற்பனையே!!! :))
Deleteமச்சி.. என்ன சொல்வதென்று தெரியவில்லை.. அருமையா இருக்கு..
ReplyDeleteஒவ்வொவொரு வரிகளும் ரசித்து ரசித்து எழுதி இருக்கிறது நன்றாக தெரிகிறது..
கொடுத்து வைத்தவள் உமக்கு வரும் மனைவி..
ரொம்ப தேங்கஸ் மச்சி....:)))))
Deleteநொடிகள் அத்தனையும் அவளுக்காக செலவளித்தவனால் மட்டுமே இத்தனை அழகாய் கவி பாட முடியும் .... #கவிதைகளில் காதலின் முக்கிய தருணத்தை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி !!!
ReplyDelete;)))
Deleteபடிச்சு முடிச்சவுடனே உங்களுக்கு என்ன தோணுதோ அதை அப்படியே எழுதுங்க.... :) @arunrajN :-P
ReplyDeleteயோவ் உன்ன கொல்லப் போறேன் பாரு... ;)))
Delete