ஒரு குடையினடியே நம்மிருவருக்கும் இடம் கொடுத்த மழைக்கும்
நன்றி சொல்வேன்..!
நன்றி சொல்வேன்..!
நடுஇரவில் உனை பயமுறுத்தி என் கரம் பற்ற வைத்த இடிக்கும் நன்றி சொல்வேன்..!
உன்னைப்பற்றி எதையாவது எழுதுவேன் என இன்றுவரை காத்திருக்கும் எனது டைரியின் தாள்களுக்கும் நன்றி சொல்வேன்..!
அன்றைய இரவில் உனக்கு ஊட்டிவிட வாய்ப்பளித்த உன்விரல் மருதானிக்கும் நன்றி சொல்வேன்..!
என் விரல் பிடித்து சாலை கடக்க உதவிய நெரிசலுக்கும் நன்றி சொல்வேன்....!
உன் முந்தானையில் தலைத்துவட்ட வாய்ப்பளித்த எனை நனைத்த மழைதுளிகளுக்கும் நன்றி சொல்வேன்...!
அன்றைய இரவில் நமது இருமனம் பகிர மௌனித்த இரவுக்கும் நன்றி சொல்வேன்....!
ஒரேயொரு குறைதான்...!
இவையனைத்திலும் என்னுடனிருந்த உன்னிடம்தான் நன்றிக்கடன் பட்டுள்ளேனடியே என்னுயிரே...!
ராசுக்குட்டி...
