Tuesday 19 December 2017

சிறுகதை: முரடன்

ஒரே இருட்டு... ஒன்றுமே தெரியவில்லை.....

மல்லாந்தவாரு கிடக்கிறேன்....

உடம்பு மேலே அப்படி ஒரு கனம்... மூச்சுவிடவே கடினமாக இருக்கிறது...

கருத்த ஒரு முரடன் மேல இருப்பது போல தோன்றுகிறது... கருத்தவனா இல்லை இல்லை இருட்டில் அப்படி தெரிகிறது..

தாடி கழுத்தில் உரச உரச இவன் இயங்கி கொண்டிருக்கிறான்...
தடுக்க, தள்ளிவிட எத்தனித்து களைத்துவிட்டேன்.... முடியவில்லை...

பெரிய உருவம்...

வலியும் தாங்க முடியவில்லை....

ஒரு சமயத்தில் என் இடுப்புக்கு கீழே மறத்து போயிற்று.....
இவ்வளவு நேரம் இருந்த வலிகூட இப்பொழுது இல்லை...

இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை...

மூச்சு விடதான் கடினமாக உள்ளது... தாகம் வேற... கத்தி கத்தி வரண்டுவிட்டது தொண்டை...

இன்னொருவன் வேற நின்று கொண்டிருக்கிறான், இல்லை இல்லை காத்திருக்கிறான்... அடுத்து வருவான் என நினைக்கிறேன்....

நிர்வானமாக அவன் வாய்ப்புக்கு காத்து கொண்டிருப்பவனிடம் ஒரு வாய் நீர் கேட்கலாமென தோன்றுகிறது...

'ஏன்டி இந்நேரம் ஊருக்கு கெளம்புற, இருந்துட்டு காலைல முத பஸ்க்கு போக வேண்டியது'தான என அதட்டிய என் அம்மாவின் பேச்சை கேட்டிருந்திருக்கலாம்...

இப்பொழுது இந்த சரளை மண் அறுக்க கிடக்கிறேன்... இடுப்பலாம் எரிச்சலாக உள்ளது..

தொடை மொத்தம் ஈரமாகி இருப்பது போல தோன்றுகிறது... ரத்தமாக இருக்கலாம்....

என் கண்ணீரைவிட அதிகமாக வெளியேறி இருக்கக்கூடும்...

இந்த சாராய நாற்றமில்லாதிருந்தாலாவது பரவாயில்லை....

கொஞ்சம் கொஞ்சமா செத்து கொண்டிருக்கிறேன்... மிச்சம் இருக்கும் உயிருடனாவது விடுவார்களா என்று தெரியவில்லை...

அன்று கல்லூரியில் உணவு இடைவேளையின் போது தோழிகளுடன் முதல் கலவி எப்படியிருக்கும் என்று சிலாகித்தது ஞாபகம் வருகிறது.... 'அவ்வளவு சுலபம் இல்லையாம்' என்று மலர்விழி சொன்னபோது 'இவளுக்கு எல்லாம்தெரியும் பாருடி' என சிரித்தோம்....

தப்புதான்...

இப்படியாகத்தான் இருக்கும் என்று எனக்கு  சத்தியமாக தெரியாது....

ஒருவழியாக அயர்ந்துவிட்டான்.... இன்னும் என் மீதிருந்து எழதான் மனமில்லை அவனுக்கு...

அடுத்து காத்திருந்தவனின் கண்களில் அப்படி ஒரு ஆர்வம், ஆனந்தம்..

என்னால்தான் சரியாக பார்க்கமுடியவில்லை கலங்கிய கண்களுடன்....

ஒரு வழியாக எழுந்துவிட்டான்...

உடம்பு லேசாகிவிட்டது..கொஞ்சம் சுத்தமான காற்று சுவாசிக்க முடிகிறது...கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது...  சாராய நாத்தமும் இல்லை...கடவுளுக்கு நன்றி சொல்லாம் என தோன்றுகிறது....

எதிரில் நின்றுருந்த அடுத்தவனை காணவில்லையே என கண்கள் தேடியது.. எங்கு சென்றான்!?

ஒரு கை மட்டும் கண்ணத்தில் தட்டுகிறது...

எழுந்திரி...

எழுந்திரி...

'எழுந்திரிடி எரும.. நேரமாகலையா உனக்கு.. ஊருக்கு கெளம்பனுட்டு பகல்ல இப்படி தூங்கிட்டிருக்க ... எரும....'

கண்விழித்ததும் அம்மா....

'கண்டிப்பா இந்நேரம் கிளம்பனுமா இருந்துட்டு காலைல முத பஸ்ஸூக்கு கிளம்பேன்டி.......

Sunday 3 December 2017

சிறுகதை: திருடன்

மே 29, மாலை 6 மணி....

மூத்தவளுக்கு பள்ளிகட்டணம் செலுத்த இன்னும் 2 நாட்களே உள்ளது...

இளையவளுக்கோ தைக்க கொடுத்த பள்ளிச்சீருடை தயாராகி 3 நாட்கள் ஆகிவிட்டது...

வீட்டிலிருந்த தொலைகாட்சி பெட்டியும் குறக்கே ஆறேழு கோடுகளோடு அவ்வப்போது அழுது கொண்டிருக்கிறது... இந்த தீபாவளிக்காவது மாற்றி விட வேண்டும்...

ரத்தினம் மாமாவிடம் 5000 தவனைக்கு கேட்டிருக்கிறேன்...
கடைக்கு வர சொல்லிருக்கிறார்...

இன்னும் பல சிந்தனைகளுடன் ஒரு சிறிய பயணம்....

பர்ஸில் இருப்பதென்னவோ 410 ரூபாய்...

பேரூந்தில் சற்று அசந்த நேரம் பர்ஸ் பறிபோனது... கையும் களவுமாக திருடனை பிடித்தே விட்டேன்... பெருத்த நிம்மதி..

சுருட்டை முடி, கருத்த மெலிந்த தேகத்துடன் ஒரு சிறுவன், 15 வயதுதான் இருக்கும்....

திருடன் திருடன்தானே...
இப்படி ஒரு திருடன் சமூகத்தில் திரிவது நமக்கெல்லாம் சாபக்கேடு இல்லையா!

மற்ற வேலையெலாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என மதிகெட்ட மனதின் பேச்சு கேட்டு காவல் நிலையம் விரைந்து புகார் கொடுக்க சென்றேன்...

புகார் எழுத துவங்கும்முன்னே......

ஒரு கட்டு பேப்பர், பேனா.. ஒன்று இல்லை ஒரு பாக்கெட், 6 டேக் பைல், 3 சாப்பாடு பொட்டலம் வாங்கி வர சொன்னார்... 410ம் காலியானது..

மனதில் ஒரு சந்தேகம் இப்போது!

மன்னிக்க இரண்டு சந்தேகம்...

யார் திருடன் ?

இப்போது நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்?...

Thursday 27 March 2014

அவள் மொழி..



என் கேசத்தினுள் நுழைந்த உன் விரல்களில் சிக்கித் தவிக்கிறதெந்தன் ஆசைகள்...!

என் தனிமையை நிரப்பும் காரணமில்லா உதட்டோர சிரிப்பினை கிளருவதிலேயே ஆர்வமாய் இருக்கிறதடா உந்தன் ஞாபகங்கள்..!

நீ என்னுடன் இருக்கையில் உன் கண்களை ரசித்தபடியே பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்று ஆசை... என்ன செய்வது வெட்கம் என்றொன்று உள்ளதாமே... பெண்ணாக இருப்பதிலிருக்கும் அசௌகர்யத்தில் இதுவும் ஒன்று..!

என் கழுத்துக்கு கீழே இறங்கும் ஒற்றை வியர்வைத்துளினூடே விலகாமல் பயணப்படும் உன் கண்களுக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்தாலென்ன....

உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என் கண்ணீருக்கு ஆயுள் குறைவு ஆனால் வலி அதிகம்..!

என் கனவுகள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும் ராட்சஷனடா நீ..!

கோபத்தில் உன் மௌனம் சற்றே எனை நிலைதடுமாறுச் செய்கிறதடா என் மனதினுள் கூச்சலிடும் உன் வார்த்தைகள்...!

என் தோள்களை பற்றிக்கொள்ள உன் கைகள் ஆசைப்பட்டதை காட்டிலும் நான் அதிகம் ஆசைப்பட்டிருப்பேன்..!

அருகருகே உன்னுடனான இனிதொரு பயணம்... தயங்கும் உன் கரங்களை நோட்டமிட்டு காத்துக்கொண்டிக்கிறது எனது கரங்கள்... ஆனாலும் பிடிக்கவில்லை இன்னும் பிடிக்கவில்லையென்பதால்...!


Sunday 19 January 2014

பரத்தையொருத்தி..



என் நாக்கிலேறிய மண்புழுவொன்று உள்நாக்கை மட்டும் தொட்டு திரும்பியது போன்றதொரு உணர்வு....

கை வழியே கழுத்துவரை ஏறிய அட்டை ஒன்றை தட்டிவிட எத்தனித்தும் முடியாமல் என் கழுத்தினிலேயே ஊறிக் கொண்டிருப்பது போன்றதொரு உணர்வு...

மதுவிலே நனைந்த தலையனையொன்றில் முகம்புதைத்து படுத்திருப்பது போன்றதொரு உணர்வு...

பேருந்தில் அருகே இருந்தவன் வாயிலெடுத்ததில் எனையறியாமல் என் உள்ளங்கை ஊன்றி எழுந்தது போன்றதொரு உணர்வு...

சாலையின் நடுவே உடல் சிதறி கிடக்கும் ஒருவனின் ஈரம் காயாமல் இருந்த குருதியில் எதிர்பாராமல் கால் பதித்தது போன்றதொரு உணர்வு...

இப்படியாகத்தான் இருந்திருக்குமோ வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட பரத்தையொருத்தியின் மேல்பட்ட முதல் ஆண்மகனின் தீண்டல்!

Thursday 25 April 2013

நானும் என் மகளும்...

இது எங்கள் உலகம்....!



என் விரல்பிடித்து நடை பழகுகிறாள்...
அவளோடு சேர்ந்து என் மனமும் நடைபழகுகிறது 
அவள் விரல்பிடித்தபடியே...!



பாதி சுவைத்த எச்சிலுடன் கொடுத்த
மிட்டாயில் இருந்த சுவை நினைவேற்றியது
அவள் எதிரில் நிற்பவள் கொடுத்த
முதல் முத்தத்தின் இனிமையை..!





உன் பிஞ்சுக்கரம் பற்றி விளையாடும்
என் முடிகள் செய்த
முன்ஜென்ம புண்ணியம்தான் என்னவோ....!



நீ தலையை ஆட்டிக்கொண்டு கைகளசைத்து
அழகுயர சொன்ன கதை சொன்னது
ஆயிரம் கதைகள்..!





அன்று எங்கள் தெருப்பக்கம் வந்த கோவில் யானை 
வரம் பெற்று சென்றது....
பயந்து ஓடி ஒளிந்து மூன்றாவது அறையில் இருந்து 
ஒற்றை விழியில் எட்டிப்பார்த்த என் கடவுளிடம்..!





என் வீட்டின்முன் மட்டும் நின்று இரண்டு மணி சேர்த்து அடிக்கும் ஐஸ்கிரீம்காரனின் சூட்சமம் புரியாமல் முறைத்து கொண்டிருந்தேன் ஓடிவந்து ஜாடையாக அவனிடம் பேசுகிறாள்....
உயிர்த் தோழனாம்...!



உன்னுடன் விளையாடி களைத்து கண்ணயரும் வேளையில் 
காதோரம் வந்து முனுமுனுக்கிறாள் 
'நான் உன் மகளாக பிறந்திருக்க கூடாதா' என்று....
எனது ஒரு புன்னகையில் புரிந்துகொண்டு
அவளும் புன்னகைக்கிறாள்...
'அடிப்பாவி என் மூத்த மகளடி நீ'...



கடவுளே கொஞ்சநேரம் என் இதயத்துடிப்பின்
இரைச்சலை நிறுத்தி வைத்துதவேன்..
தேவதை என் மார்பில் படுத்துறங்கும் நேரம் இது..!

-ராசுக்குட்டி

Wednesday 3 April 2013

கொஞ்சம் ஆசைபட்டுவிட்டேன்.......!

இதை யாரிடம் போய் சொல்வேன்......



  • என் வண்ண நிழல் காண ஆசை...!

    பனித்துளியில் தாகம் தீர்க்க ஆசை....!

    வானுயர பறக்கும் வானம்பாடியுடன் அந்த வளைவுவரை விரல் பிடித்து நடந்து செல்ல ஆசை....!

    வெயிலில் நனையும் அந்த ஒற்றை பனைமரத்துக்கு குடை பிடிக்க ஆசை...!

    குளித்தெழுந்து வந்த காகத்திடம் நேரவிரயம் பற்றி எடுத்துரைக்க ஆசை..!

    கடிகார முட்களிடத்தில் ஓடாமல் ஒரிடத்தில் நின்று மரியாதையாக நேரம் காட்ட சொல்லி கொடுக்க ஆசை...!

    தூக்கமின்றி தவிக்கும் என் கனவுகளுக்கு தாலாட்டு பாடி தூங்க வைக்க ஆசை...!

    யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த தன் ஆசைகளை புத்தன் வாயாலேயே கேட்டரிய ஆசை...!

  • படிக்க மட்டுமே தெரிந்த என் கண்களுக்கு எழுதவும் கற்றுக் கொடுக்க ஆசை...!

    நடக்கபயிலும் குழந்தையிடம் தவள கற்றுக்கொள்ள ஆசை....!

    ஒரு முறையாவது வானவில்லின் நிழல் பார்த்துவிட ஆசை.....!

    என்னவளின் கன்னக்குழியில் என் எச்சில் நிறைக்க ஆசை.....!

    என் மகளின் மடியில் ஒரு நிமிடம் கண்ணயர ஆசை...!

    பக்கம் பக்கமாக ஒரு வரிக் கவிதை எழுத ஆசை....!

    ஆசை ஆசை ஆசைதான்.......


      இறுதியாக இவையனைத்தையும் யாரிடமாவது உளறிவிட வேண்டுமென்ற ஒரேயொருமுறை  சைதான்.... 


    கடைசியில் இதுமட்டும்தான் நிறைவேறியதுபோல தெரிகிறது.....

    நின்று கேட்டதற்கு நன்றி...! 


                                                                                            - ராசுக்குட்டி                                                                                                                                                        


Saturday 2 March 2013

நன்றிக்கடன்.........





ஒரு குடையினடியே நம்மிருவருக்கும் இடம் கொடுத்த மழைக்கும்
நன்றி சொல்வேன்..!

நடுஇரவில் உனை பயமுறுத்தி என் கரம் பற்ற வைத்த இடிக்கும் நன்றி சொல்வேன்..!

உன்னைப்பற்றி எதையாவது எழுதுவேன் என இன்றுவரை காத்திருக்கும் எனது டைரியின் தாள்களுக்கும் நன்றி சொல்வேன்..!

அன்றைய இரவில் உனக்கு ஊட்டிவிட வாய்ப்பளித்த உன்விரல் மருதானிக்கும் நன்றி சொல்வேன்..!

என் விரல் பிடித்து சாலை கடக்க உதவிய நெரிசலுக்கும் நன்றி சொல்வேன்....!

உன் முந்தானையில் தலைத்துவட்ட வாய்ப்பளித்த எனை நனைத்த மழைதுளிகளுக்கும் நன்றி சொல்வேன்...!

அன்றைய இரவில் நமது இருமனம் பகிர மௌனித்த இரவுக்கும் நன்றி சொல்வேன்....!

ரேயொரு குறைதான்...!

இவையனைத்திலும் என்னுடனிருந்த உன்னிடம்தான் நன்றிக்கடன் பட்டுள்ளேனடியே என்னுயிரே...!


                                                                                ராசுக்குட்டி...